Sunday, December 3
Shadow

Tag: #shrathasrinath # Neelam #dilpkumar #mara

மாதவனின் புதிய அவதாரம் “மாறா”

மாதவனின் புதிய அவதாரம் “மாறா”

Latest News, Top Highlights
மாதவனும், ஷ்ரதா ஸ்ரீநாத்தும் 'விக்ரம் வேதா' படத்தில் இணைந்து நடித்தனர். 'விக்ரம் வேதா' படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். 'கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் என்ற அறிமுக இயக்குநர் இந்த படத்தை இயக்குகிறார். ரொமாண்டிக் டிராமாவாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு 'மாறா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' மற்றும் இப்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வசனம் எழுதிய நீலன் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். a விக்ரம் வேதா படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சற்குணம் இயக்கும் படத்துக்கு முன்னதாக மாறா படத்தில் மாதவன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....