Thursday, April 23
Shadow

Tag: #silasamayngalil #prakashraj #sheryareddy

பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

Latest News, Top Highlights
விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களை கொடுக்கும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரை பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய 'சில சமயங்களில்' இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்க சென்று சேரும் விதமான கதையை கொண்டிரு...