நடிகரும், பின்னணி பாடகருமான மலேசியா வாசுதேவன் பிறந்த தினம்
'ஆயிரம் மலர்களே...,' 'கோடை காலக் காற்றே...', 'பட்டு வண்ண ரோசாவாம்...', 'வான் மேகங்களே,' 'அடி ஆத்தாடி...', 'பூங்காத்து திரும்புமா...' - இந்தப் பாடல்கள் வெளிவந்த நாட்களில் தான் பாட முடியாவிட்டாலும் முணுமுணுக்காமல் இருந்தவர்கள் கிடையாது. அழுத்தமான குரலாலும் பாவத்தாலும் இவற்றுக்கு ஜீவன் அளித்தவர் மலேசியா வாசுதேவன். மலேசியாவிலிருந்து திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வந்து, பல கஷ்டங்களை எதிர்கொண்டு, தான் கனவு கண்டதைச் சாதித்தவர்.
ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது. படிப்புக்குப் பின் மலேசியாவின் புகழ்பெற்ற இசைக் குழு ஒன்றில் சேர்ந்தார். குழுவின் பிரதான பாடகராக, டி.எம்.எஸ்.ஸின் பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றார். நாடகங்களில் நடித்தார். தமிழ்த் திரைப...
