சிவகார்த்திகேயன் விட்ட இடத்தை பிடித்த வைபவ்
நடிகர் வைபவ் வளர்ந்துவரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். கடைசியாக இவர் நடித்த மேயாதமான் திரைப்படம் நன்கு பேசப்பட்டது. இவர் இப்போது ஆர்கே.நகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்
வைபவ் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த யுவராஜ் இயக்குகிறார். இப்படத்தில் நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு "டாணா" என பெயரிட்டுள்ளனர். போலீஸ்காரர்களை டாணாக்கார் என அழைக்கும் வழக்கம் சில பகுதிகளில் இன்றும்உள்ளது. அதனால் இந்த பெயரை வைத்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் வைபவ்வின் அப்பாவாக நடிக்கிறார். பாண்டியாஜனின் அப்பா, தாத்தா என அனைவரும் காவல்துறையில் பணியாற்றியவர்கள். அதனால் மகன் வைபவ்வையும் போலீஸ் அடிகாரியாக மாற்ற வேண்டுமென பாண்டியராஜன் ஆசைப்படுகிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக உள்ளதாம்.
இப்படத்தில் வில்லனாக விக்...