
விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள “சங்கத்தமிழன் ” படத்தின் டீஸர் மிக பெரிய வறவேற்ப்பு
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , சூரி ,அசுதோஷ் ரா...