வடசென்னை ரௌடிகளின் கதையை பார்த்த நமக்கு வட சென்னை டாக்டர் கதை தான் விக்ரமின் ஸ்கெட்ச்
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “
மிக பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.
மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இந்த படத்துக்கு இசை தமன் இந்த படத்தை சிம்பு படத்தை இயக்கிய விஜயசந்தர் தான் இயக்குகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் பாடலும் எழுதுகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடி...
