சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’, ‘Maamadura’!
சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’, ‘Maamadura’!
தமிழ் இசையின் தனித்துவத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மற்றுமொரு முக்கிய மைல்கல்
தமிழ் இசையை உலக அரங்கில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல் இணைந்துள்ளது.
அவர் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’ படத்தில் இடம்பெற்றுள்ளன.
உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் எடுத்துக்காட்டும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.
குறிப்பாக, தமிழ் நாட்டுப்புற இசையின் வேர்களையும் ந...


