Friday, June 21
Shadow

Tag: #soundarraja #students #trees #planting

120 மாணவ, மாணவிகளுடன் மரக்கன்று நட  களமிறங்கிய சௌந்தரராஜா!

120 மாணவ, மாணவிகளுடன் மரக்கன்று நட களமிறங்கிய சௌந்தரராஜா!

Latest News
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலமாக அறிமுகமானார். தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, என சௌந்தரராஜாவின் திரைப்பயணம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்டு 11. சௌந்தரராஜாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 25 வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டு, அதை வளர்க்க ஏற்பாடு செய்து தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், சௌந்தரராஜா. தன் சொந்த செலவில், முறையாக பெரிய குழிகள் தோண்டி, அடிப்படை உரமிட்டு, ஆடு, மாடுகள் கடிக்காமல் இருக்க, ரூபாய் 1200க்...