
பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)
கொரானா தாக்குதல் பிறகு திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் படம் . சினிமா ரசிகர்களின் தவிப்பு இந்த மாதம் தீர்ந்தது என்று சொல்லலாம் ஆம் , அது இந்த படம் சந்தானம் ரசிகர்களின் தாகத்தை தீர்த்தா என்று பார்க்கலாம்.
சிறிய அளவில் பிஸ்கெட் தயாரித்து வரும் தர்மராஜன்(ஆடுகளம் நரேன்) தன் தொழிலில் வெற்றி பெற்று பெரிய ஆளாகி மகன் ராஜாவை(சந்தானம்) அந்த நிறுவனத்தின் தலைவராக்க விரும்பவுதை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. ஆனால் விதி விளையாடி தர்மராஜன் இறந்துவிடுகிறார். இதையடுத்து தர்மராஜனின் தொழிலை அவரின் நண்பரான நரசிம்மன்(ஆனந்த்ராஜ்) எடுத்து நடத்துகிறார்.
ஆண்டுகள் செல்ல செல்ல ராஜா அந்த கம்பெனியில் வேலையாளாக மாறுகிறார். முதியோர் இல்லம் ஒன்றில் வசிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஜா புதிதாக வரும் ஜானகியிடம்(சௌகார் ஜானகி) நெருக்கமாகிறார்.
ஜானகிக்கு கதை சொல்லும் பழக்கம் உள்ளது. ஜானகி சொல்ல...