Friday, December 4
Shadow

பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

கொரானா தாக்குதல் பிறகு திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் படம் . சினிமா ரசிகர்களின் தவிப்பு இந்த மாதம் தீர்ந்தது என்று சொல்லலாம் ஆம் , அது இந்த படம் சந்தானம் ரசிகர்களின் தாகத்தை தீர்த்தா என்று பார்க்கலாம்.

சிறிய அளவில் பிஸ்கெட் தயாரித்து வரும் தர்மராஜன்(ஆடுகளம் நரேன்) தன் தொழிலில் வெற்றி பெற்று பெரிய ஆளாகி மகன் ராஜாவை(சந்தானம்) அந்த நிறுவனத்தின் தலைவராக்க விரும்பவுதை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. ஆனால் விதி விளையாடி தர்மராஜன் இறந்துவிடுகிறார். இதையடுத்து தர்மராஜனின் தொழிலை அவரின் நண்பரான நரசிம்மன்(ஆனந்த்ராஜ்) எடுத்து நடத்துகிறார்.

ஆண்டுகள் செல்ல செல்ல ராஜா அந்த கம்பெனியில் வேலையாளாக மாறுகிறார். முதியோர் இல்லம் ஒன்றில் வசிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஜா புதிதாக வரும் ஜானகியிடம்(சௌகார் ஜானகி) நெருக்கமாகிறார்.

ஜானகிக்கு கதை சொல்லும் பழக்கம் உள்ளது. ஜானகி சொல்லும் கதைகள் தன் வாழ்க்கையில் நிஜமாவதை உணர்கிறார் ராஜா. அவரின் வாழ்க்கை நல்லபடியாக முடியும்படி செய்வாரா ஜானகி?

ஆடம் சாண்ட்லரின் பெட்டைம் ஸ்டோரீஸ் படத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு பிஸ்கோத் மூலம் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கண்ணன். பெட்டைம் ஸ்டோரீஸை பாட்டி கதையாக்கிவிட்டார், பேபிசிட்டிங் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை கவனிப்பதாகிவிட்டது. ஹோட்டல் பிசினஸ் பிஸ்கட் பிசினஸ் ஆகிவிட்டது. இப்படி ஹாலிவுட் படத்தில் இருந்ததை தமிழர்களுக்கு ஏற்றது போன்று மாற்றிவிட்டார் கண்ணன்.

 

சந்தானம் தன் பங்கை தன் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்று மிகவும் உணர்ந்து காமெடி சரவெடி கொடுத்து இருக்கிறார். என்று சொன்னால் மிகையாகது.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் அவர்களின் கதாபாத்திரம் மனதில் பதியவில்லை. காரணம் திரைக்கதை முக்கியத்துவம் இயக்குனர் கொடுத்ததால்  ரசிகர்களை கவர வேண்டிய முக்கிய காட்சிக்கு காட்சி சிரிப்பு சரவெடியால் ரசிகர்களை கவர்ந்தார் பிற கதாபாத்திரங்கள் சொல்வதற்கு சந்தானம் கவுன்ட்டர் கொடுப்பதை பார்த்தால் லொள்ளு சபாவின் புதிய எபிசோடை பார்ப்பது மாதிரி இருக்கிறது. ஆனால் லொள்ளு சபா எல்லாம் மிஞ்சிய ஒரு அமர்களமான ஒரு நகைச்சுவை படம் .

படத்தில் தோன்றும் அனைத்து கதாபாத்திரமும் படத்துக்கு பலம் செர்த்துள்ளனர் நிச்சயம் இந்த தீபாவளிக்கு ஒரு நகைச்சுவை விருந்து என்று தான் சொல்லனும் .

இயக்குனர் கண்ணன் கதையில் பலம் அதிகம் செலுத்தியவர் மற்ற கதாபாத்திரங்களையும் கவனித்து இருக்கலாம்.

CLOSE
CLOSE