இந்தியாவில் உள்ள எல்லா நடிகர்களும் நடிகைகளும் பங்கேற்க உள்ள ஸ்டண்ட் யூனியனின் பொன் விழா…
சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத் தான்
வெள்ளித்திரை பிரகாசிக்கிறது... கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான் ஒரு படம் திரைக்கு வருகிறது
அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப் பட்ட எங்கள் யூனியன் பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம்.
இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.. இன்று எங்களோடு இல்லா விட்டாலும்
யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாகநாங்கள் 50 தை கடந்திருக்கிறோம்..
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பொன்விழாவை...
