Saturday, October 1
Shadow

Tag: Super Star

700 திரையரங்கில் வெளியாகிறது ஐரா; முன்பதிவு நாளை தொடக்கம்

Latest News, Top Highlights
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் 'ஐரா'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோட்டபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தபடம் ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். ஐரா படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கான புக்கிங் நாளை முதல் தொடங்க உள்ளது. மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக கலையரசன் நடித்துள்ள இந்தப்படத்தில் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'சூப்பரா ...
அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று முதல் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். மேலும் ரஜினி பேசுகையில், ‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளத...