நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு
அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்ரிகையாளர் சமஸ் , திரு. கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசியது கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப்பறிவு இல்லாமல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம்.இது போல் படி படியாக பலவற்றை கூறலாம்.பல ஏற்ற தாழ்வுகள் கொண்ட...
