சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்
சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்
சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘சூர்யா பின் விஸ்வநாதன் அண்ட் சன்’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான வசூல், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வசூல் சாதனையைத் தாண்டி, திரையரங்குகளில் காணப்படும் ரசிகர்களின் வரவேற்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த...

