Saturday, October 10
Shadow

சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்

சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘சூர்யா பின் விஸ்வநாதன் அண்ட் சன்’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான வசூல், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வசூல் சாதனையைத் தாண்டி, திரையரங்குகளில் காணப்படும் ரசிகர்களின் வரவேற்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பல காட்சிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்றளவும் பல்வேறு திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

குடும்ப ரசிகர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரை பல்வேறு தரப்பினரும் படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருவதுடன், திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டமும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு, இதன் வசூல் பயணம் மேலும் நீளும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சூர்யாவின் நடிப்பு, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திரங்களின் பங்களிப்பு, படத்தின் கதைக்களம் மற்றும் திரையரங்கு அனுபவம் ஆகியவை ரசிகர்களிடையே பேசுபொருளாகி வரும் நிலையில், ‘சூர்யா பின் விஸ்வநாதன் அண்ட் சன்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

ரூ.100 கோடி வசூலை மிகக் குறுகிய காலத்தில் கடந்துள்ளதுடன், திரையரங்குகளில் தொடர்ந்து காணப்படும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள், ‘சூர்யா பின் விஸ்வநாதன் அண்ட் சன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வலுவான இடத்தைப் பிடித்திருப்பதை உறுதி செய்துள்ளது. வரும் நாட்களில் விடுமுறை மற்றும் வார இறுதி வசூல் இந்த சாதனையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya’s ‘ Viswanathan & Son’ Storms the Box Office, Crosses ₹100 Crore in Just Two Days

Suriya, Mamitha Baiju, Radhika Sarathkumar, Sunil, Raveena Tandon and an ensemble of talented actors headline ‘Suriya Bin Viswanathan & Son’, which has emerged as a major box-office success since its release last Friday.

The film has registered an impressive milestone by crossing the ₹100 crore mark within just two days of its theatrical release. The swift pace of its collections reflects the strong anticipation surrounding the film and the overwhelming response it has received from audiences.

Beyond its box-office numbers, the audience response in theatres has become one of the biggest highlights of the film’s success. Several shows continue to witness packed houses, with audiences turning up in large numbers even days after its release.

From young moviegoers to family audiences, the film has managed to attract viewers across different sections. The celebrations and enthusiastic reactions from fans in theatres have further added to the film’s growing momentum.

Suriya’s performance, the presence of Mamitha Baiju, Radhika Sarathkumar, Sunil and Raveena Tandon, along with the film’s storyline and theatrical experience, have been widely discussed among audiences. The sustained occupancy across theatres has also strengthened expectations that the film will continue its strong run in the coming days.

Having crossed the ₹100 crore milestone within its first two days, ‘Suriya Bin Viswanathan & Son’ is now racing towards bigger box-office milestones. With the weekend and upcoming shows expected to add further momentum, the film is poised for an even stronger theatrical run.