“பழிவாங்காதே… வாழ்ந்து காட்டு!” – இளைஞர்களின் மனநிலையை பேசும் ‘வஞ்சம் தீர்’ ஆல்பம் பாடல்
“பழிவாங்காதே... வாழ்ந்து காட்டு!” – இளைஞர்களின் மனநிலையை பேசும் ‘வஞ்சம் தீர்’ ஆல்பம் பாடல்
இன்றைய சமூகத்தில் அவமானம், நிராகரிப்பு, துரோகம், ஏமாற்றம் போன்ற அனுபவங்கள் பலரது மனதிலும் கோபத்தையும் பழிவாங்கும் எண்ணத்தையும் விதைக்கின்றன. ஆனால் அந்த எதிர்மறை உணர்வுகளை வெற்றிக்கான எரிபொருளாக மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கான கலை வடிவ பதிலாக உருவாகியுள்ளது “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல்.
புஷ்பநாதன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLP இணைந்து தயாரித்துள்ள இந்த இசைத் தொகுப்பு, வெறும் பொழுதுபோக்கு பாடலாக இல்லாமல், மனதின் இருண்ட மூலைகளில் ஒளிந்திருக்கும் உணர்வுகளுடன் உரையாடும் ஒரு சிந்தனைப் படைப்பாக உருவாகியுள்ளது.
“உன்னை காயப்படுத்தியவர்களை பழிவாங்குவதற்குப் பதிலாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில்” என்ற மையக் கருத்தை மிகத் தெளிவாகவும் தாக்கமிக்க வகையிலும் பாடல் முன்வைக்கிறத...
