பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் புதிய ஃபேமிலி என்டர்டெய்னர்! சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் புதிய ஃபேமிலி என்டர்டெய்னர்! சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
நகைச்சுவை, காதல், குடும்பப் பாசம் என அனைத்து அம்சங்களும் கலந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எம். குரு இயக்குகிறார்!
தமிழ் நடிகர் பரத், மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம், அக்டோபர் 21-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை, காதல், பாசம், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்குகிறார். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
நட்சத்திரக் கூட்டணியால் அதிகரிக்கும் எதிர்பார்ப...


