
பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் புதிய ஃபேமிலி என்டர்டெய்னர்! சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
நகைச்சுவை, காதல், குடும்பப் பாசம் என அனைத்து அம்சங்களும் கலந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எம். குரு இயக்குகிறார்!
தமிழ் நடிகர் பரத், மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம், அக்டோபர் 21-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை, காதல், பாசம், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்குகிறார். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
நட்சத்திரக் கூட்டணியால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பரத், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத் திரைப்படங்களான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ன்னா தான் கேஸ் கொடு’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜேஷ் மாதவனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயல்பான நடிப்புக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்ற ராஜேஷ் மாதவன், ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றார். இருவரின் மாறுபட்ட நடிப்புப் பாணியும் இப்படத்தில் இணைவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கதாநாயகிகளாக மூன்று இளம் நடிகைகள்!
தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையும், தமிழில் ‘புல்லட்’ படத்தில் நடித்தவருமான சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ், ‘மார்கழி திங்கள்’, ‘திரௌபதி 2’ ஆகிய படங்களில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும், நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவினர் விவரம்
இப்படத்திற்கு ஒளிப்பதிவை எஸ்.ஆர். சதீஷ் குமார் மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் E. சித்தார்த் கவனிக்கிறார். கலை இயக்குநராக டான் பாலா, சண்டைப் பயிற்சியாளராக தினேஷ் காசி, ஒப்பனைக் கலைஞராக மணி, ஆடை வடிவமைப்பாளராக லாவண்யா தேசிகன் பணியாற்றுகின்றனர்.
விளம்பர வடிவமைப்பை தினேஷ் அசோக் மேற்கொள்ள, தயாரிப்புக் கட்டுப்பாட்டுப் பணிகளை சேது பாண்டியன் கவனிக்கிறார். ஆடைப் பொறுப்பில் விக்னேஷ், புகைப்படக் கலைஞராக சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
சென்னை, ஆலப்புழாவில் 45 நாட்கள் படப்பிடிப்பு!
படத்தின் படப்பிடிப்பைச் சென்னை மற்றும் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
நகைச்சுவை மூலம் சிரிக்க வைப்பதோடு, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் பாசத்தின் ஆழத்தையும் உணர்த்தும் படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது. பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்துள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

Bharath and Rajesh Madhavan Join Hands for a New Family Entertainer; Film Begins with a Grand Pooja Ceremony!
Directed by debutant M. Guru, the upcoming film promises a delightful blend of comedy, romance, family emotions and sentiment.
A new film starring Tamil actor Bharath and Malayalam actor Rajesh Madhavan was officially launched with a pooja ceremony on October 21. Featuring a blend of comedy, romance, family bonding and emotional moments, the yet-to-be-titled film is being developed as a commercial family entertainer aimed at audiences across generations.
The film is jointly produced by Twin Tower Productions and D Chronicle Productions LLP. Debutant director M. Guru has written and is directing the project. The makers are expected to announce the film’s title and further details soon.
Bharath and Rajesh Madhavan’s Fresh On-Screen Combination
Bharath, who has earned recognition for his performances in films such as Kadhal, Pattiyal, Veyil and Em Magan, plays the lead role in the upcoming film.
Rajesh Madhavan, known for his natural performances and comic timing, joins the cast after making a mark in Malayalam cinema with films such as Maheshinte Prathikaaram and Nna Thaan Case Kodu. He has also attracted attention among Tamil audiences through his appearance in the song ‘Ala Polelo’ from Jailer 2.
The coming together of Bharath and Rajesh Madhavan, each known for a distinct acting style, is one of the major highlights of the project.
Three Young Actresses as Female Leads
The film features three actresses in the female lead roles: Shivestha Raj (Vaishali Raj), an emerging actress in Telugu cinema who has also appeared in the Tamil film Bullet; Meenakshi Dinesh, who gained attention through Youth; and Rakshana Induchoodan, known for her roles in Margazhi Thingal and Draupathi 2.
The supporting cast includes comedian Muneeshkanth, actress Sujitha and Katterumbu Stalin, among others.
Talented Technical Team On Board
S.R. Sathish Kumar is handling the cinematography, while Arul E. Siddharth is in charge of editing. The technical crew also includes art director Don Bala, stunt choreographer Dinesh Kasi, makeup artist Mani and costume designer Lavanya Desikan.
Dinesh Ashok is responsible for publicity design, while Sethu Pandian oversees production control. Vignesh is handling costume supervision, and Siva is the still photographer. PRO Yuvaraj is managing the film’s public relations.
45-Day Shooting Schedule in Chennai and Alappuzha
The makers have planned a 45-day shooting schedule across Chennai and the picturesque locations of Alappuzha in Kerala.
The launch ceremony was attended by the producers, cast members and technicians. Director Virumandi sounded the first clap, marking the commencement of the film’s shooting.
With humour, emotional moments and the importance of family relationships at its core, the film aims to offer an entertaining cinematic experience for audiences of all age groups. The combination of an engaging storyline and a promising ensemble cast is expected to be one of its key strengths.
The film’s title and additional details will be officially announced by the makers soon.
