Saturday, February 14
Shadow

Tag: #teaser

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட காலமாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடல்கள் நீக்கப்பட்டதற்கு படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதன்படி, படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் தற்காலிகமாக பொது பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் மே மாதம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளனர்....

அரசியல் விமர்சன காமெடிகளுடன் வெளியானது தர்மபிரபு பட டீசர்

Latest News, Top Highlights
காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள 'தர்மபிரபு' படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. இவருடன் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்நிலையில் யோகிபாபு எமதர்மனாக நடித்திருக்கும், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  https://www.youtube.com/watch?v=4A-_xRTHulc ...
அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

Latest News, Top Highlights
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெ...