
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. நீண்ட காலமாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடல்கள் நீக்கப்பட்டதற்கு படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதன்படி, படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் தற்காலிகமாக பொது பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் மே மாதம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளனர்.
