அமீர் ரஜினிக்கு வீசிய கத்தி, தாணுவையும் உரசியது
சில தினங்களுக்கு முன் ரஜினியை ஒரு பொது மேடையில் வைத்து வாங்கு வாங்கென வாங்கிவிட்டார் அமீர்.
“பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சியானது என்று ரஜினி எப்படி கூறுகிறார்? கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா, மொத்த படத்தின் வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? இதுவரைக்கும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தற்கு வரவேற்பு அளித்தது ஏன்?” இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, படபடவென கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டார் அமீர்.
அமீர் இப்படி ரஜினியை குறி வைத்து விளாசினாலும், பாதிக்கப்படப் போவது கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணுதான். அமீர் கேள்வி கேட்டுவிட்டாரே என்பதற்காக எந்த இன்கம்டாக்ஸ் அதிகாரியும் தாணுவின் வீட்டுக் கதவை தட்டப் போவதில்லை. ஆனால் அமீரின் கேள்வி சில சங்கடங்களை தரும் அல்லவா? அதுத...