Monday, June 22
Shadow

Tag: #thala

சென்னையில் நடுரோட்டில் காரை தள்ளிய அஜித்.. நெகிழ்ந்த நண்பர்!

சென்னையில் நடுரோட்டில் காரை தள்ளிய அஜித்.. நெகிழ்ந்த நண்பர்!

Latest News, Top Highlights
நடிகரின் அஜித் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவரின் நல்ல குணம், நற்பண்பு உதவும் குணம் என சில விஷயங்கள் யாராவது கூறினால் மட்டுமே வெளிவருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித், தனது நண்பர் பிரதாப்புடன் சென்னையில் இரவு நேரத்தில் சென்னையில் உலா வந்துள்ளார். அப்போது காரினை பிரதாப் இயக்க, அஜித் அருகில் அமர்ந்திருக்கிறார். சென்னை தி நகரில் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் பெட்ரோல் இல்லாமல் நின்று விட பதறி போய்விட்டார் பிரதாப். காரில் அஜித்தை உட்கார வைத்து சிறிது தூரம் காரை தள்ளிச் சென்று பெட்ரோலை பங்கிற்கு செல்ல காரை தள்ள முற்பட்டிருக்கிறார் பிரதாப். அந்த சமயத்தில், அஜித் தான் இறங்கி காரை தள்ளுவதாக கூறி பிரதாப்பை காரில் உட்கார வைத்து நடுரோட்டில் காரை தள்ளிக் கொண்டே பெட்ரோல் பங்க் வரை சென்றிருக்கிறார் அஜித். அஜித்தின் இந்த மனப்பான்மையை எண்ணி நெகிழ்ந்து போனாராம...
அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

Latest News, Top Highlights
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். - சிவாஜி, ‘ரஜினி - கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி...
என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்

என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்

Latest News, Top Highlights
அஜித்தை வைத்து வரலாறு படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார். அப்போது, நான் இதுவரை 47 படங்களை இயக்கியிருக்கிறேன். கதை, படம், படப்பிடிப்பு என எல்லாவற்றையும் பற்றி தன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்பார்கள். ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் அதுபோன்ற தன்னிடம் கேட்டதில்லை. எனது விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா, மற்றொருவர் தல அஜித் குமார் என்று தான் கூறியிருக்கிறார். அஜீத் குறித்து நடிகர், நடிகைகள் பலரும் பாராட்டிக் கூறிவரும் நிலையில், ...
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்

Latest News, Top Highlights
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே, எதற்காக கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அஜித் கூறியதாக எஸ் வி சேகர் கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், லைகா மொபைல் மற்றும் சன் நெட்வொர்க் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன. ஆனால், இந்த விழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்க டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார் எஸ்.வி.சேகர். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவருக்கு அவர் அனுப்பி...
அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்

அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் 'மங்காத்தா', 'பில்லா' போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர். இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜித்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் "அஜித்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருக்கிறேன்" என்று மோகன்ராஜா கூறியுள்ளார். அஜித்தின் 59வது படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
மீண்டும் ஒரு ‘மங்காத்தா’… அஜித்தை இயக்க வருகிறார் மோகன் ராஜா..???

மீண்டும் ஒரு ‘மங்காத்தா’… அஜித்தை இயக்க வருகிறார் மோகன் ராஜா..???

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள வேலைக்காரன் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள இயக்குனர் மோகன் ராஜா, அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மோகன் ராஜா, ‘ அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் நெகட்டிவ் ஸ்டைல் கதை செய்ய நான் தயார் ' என்று பதிலளித்துள்ளார். அஜித் நடிப்பில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் நெகடிவ் கதாபாத்திரம் ஆதலால் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் அதிலும் மோகன்ராஜா இயக்கத்தில் அவர் உருவாக்கும் வித்தியாசமான கேரக்டரில் அஜித் நடித்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது....
விசுவாசம் படத்திற்கு யார் தான் இசையமைபாளர்?

விசுவாசம் படத்திற்கு யார் தான் இசையமைபாளர்?

Latest News, Top Highlights
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். இது ‘தல’ அஜித்தின் 58-வது படமாம். ‘விசுவாசம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகாவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது. முதற்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை இம்மாதம் (ஜனவரி) இறுதியில் துவங்கவுள்ளனர். படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம். முதலில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியிருந்ததாக கூறப்பட்டது. அ...
எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்

எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவைத் தொடர்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட இருக்கிறார். விரைவில் இவரது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நட்சத்திரக் கிரிக்கெட் விழாவில் பங்கேற்க மலேசியா சென்றிருக்கிறார். அவருடன் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 340-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். அங்கு சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யாவின் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இந்திய அணியில் தல டோனி தான் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு எப்போதுமே பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்றும் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனும் மலேசியா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆத்விக் அஜித்

சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆத்விக் அஜித்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்த படத்தில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து மாறி இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கருப்பு முடியுடன் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அவரது தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அஜித் தன்னுடைய மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனால், அஜித் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜித் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளத...
பிக் பாஸ் நடிகையை இந்த பாடுபடுத்தும் தல ரசிகர்கள்???

பிக் பாஸ் நடிகையை இந்த பாடுபடுத்தும் தல ரசிகர்கள்???

Latest News
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி.இவர் வைகைப்புயல் வடிவேலு, கோவை சரளா, மயில்சாமி போன்ற நட்சத்திரங்களின் கூட பல படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார்.நடிகை ஆர்த்தி தலயின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே. நடிகை ஆர்த்தி தற்போது தன் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.இந்த செய்தியை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த செய்தியை அறிந்த நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்வது சினிமா பிரபலங்களில் முதன்முதலில் செய்தது உலகநாயகன் கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்வதும் பலநேரம் பாடுபடுத்துவதாகவே ஒரு கட்டத்திற்கு மேல் தோன்றும்...