Wednesday, May 29
Shadow

சென்னையில் நடுரோட்டில் காரை தள்ளிய அஜித்.. நெகிழ்ந்த நண்பர்!

நடிகரின் அஜித் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவரின் நல்ல குணம், நற்பண்பு உதவும் குணம் என சில விஷயங்கள் யாராவது கூறினால் மட்டுமே வெளிவருகிறது.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித், தனது நண்பர் பிரதாப்புடன் சென்னையில் இரவு நேரத்தில் சென்னையில் உலா வந்துள்ளார்.

அப்போது காரினை பிரதாப் இயக்க, அஜித் அருகில் அமர்ந்திருக்கிறார். சென்னை தி நகரில் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் பெட்ரோல் இல்லாமல் நின்று விட பதறி போய்விட்டார் பிரதாப்.

காரில் அஜித்தை உட்கார வைத்து சிறிது தூரம் காரை தள்ளிச் சென்று பெட்ரோலை பங்கிற்கு செல்ல காரை தள்ள முற்பட்டிருக்கிறார் பிரதாப்.

அந்த சமயத்தில், அஜித் தான் இறங்கி காரை தள்ளுவதாக கூறி பிரதாப்பை காரில் உட்கார வைத்து நடுரோட்டில் காரை தள்ளிக் கொண்டே பெட்ரோல் பங்க் வரை சென்றிருக்கிறார் அஜித்.

அஜித்தின் இந்த மனப்பான்மையை எண்ணி நெகிழ்ந்து போனாராம் பிரதாப்.

நன்றி வலைபேச்சு

Leave a Reply