விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட “தலைவணங்காதே தமிழா”
விவசாயத்தையும் விவசாயிகளை கொண்டாடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட இசையமைப்பாளர் அருண்ராஜின் - தலைவணங்காதே தமிழா
"தலைவணங்காதே தமிழா" பாடல் பொங்கல் அன்று விவசாயத்தையும் விவசாயிகளைக் கொண்டாடுவதற்காகவும் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தயாரித்து இசையமைத்து வெளியிட்டவர் இசையமைப்பாளர் அருண்ராஜ்
திரைப்பட நடிகர்களான திரு. அருண்விஜய், திரு. சமுத்திரக்கனி, திரு. Rj. பாலாஜி, ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டு விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அருண்ராஜ் பாடல் உருவானதைப் பற்றி கூறுகையில் '' நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டபோது தான் போராட்டத்தின் நிலையும் விவசாயிகளின் பக்கம் உள்ள உண்மையும் தன்னை இந்தப் பாடலை உருவாக்கவழிவகுத்தது.
இந்தப்பாடல் தந்தை மகனைப் பற்றிய அழகிய வாழ்வியல் கதை தொகுப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையும் அதில் அவர்கள் சந்திக்கும் கடன் ...
