தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் களம் இறங்கும் விஷாலின் புதிய அணி
இப்போது தான் நான் கேள்விபட்டேன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை. எனக்கு இது வியப்பளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும் போது முதலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தான் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவார்கள். உறுப்பினர் பதவில் இருந்து நான் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது பத்திரிக்கையாள நண்பர்கள் மூலமாக தான் எனக்கு தெரியவந்தது.
எனக்கு இப்போது வரை கடிதம் வரவில்லை. போண்டா , பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள். “ போண்டா , பஜ்ஜி “ என்பது கெட்ட வார்த்தையா ?? அது ஒரு தவறான உணவு இல்லை.
நடிகர் சங்கத்தில் , எங்கள் படபிடிப்பில் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம். என்னை பொறுத்தவரை சின்ன தயா...