தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் ‘தொட்ரா’..!
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..
சரவணக்குமார் புது வில்லனாக அறிமுகமாகிறார். "மெட்ராஸ்" பட வில்லன்களைப் போல இதில் முழுக்க முழுக்க விளையாடியிருக்கிறார். ஒரு படம் வெற்றியடைய கதாநாயகனை எதிர்ப்பவர் சரியான தேர்வாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவராக சரவணக்குமார் இப்படத்தில் பார்ப்பவர்களுக்கு பயமேற்படுத்தும் பாத்திரத்தில் நடித்த...
