சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் யுவன்சங்கர் ராஜா ஹர்பஜன் சிங்
எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் டிக்கிலோனா படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது. அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜாவும் நடிகராக ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் இணைகிறார்கள் என்ற இனிப்பான செய்தியை இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டிக்கிலோனா என்ற தலைப்பும், முதன்முதலாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதும் எப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதேபோல் யுவங்சங்கர் ராஜா இசை அம...