இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் ட்ரெண்ட்லௌட் தயாரிக்கும் இணையதள தொடர்
தமிழ்நாட்டின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட் நிறுவனமும், விஷன் டைம் நிறுவனத்தின் ஒரு பிரிவுமான ட்ரெண்ட்லௌட், உருவாக்கியுள்ள 'As i am Suffering from Kadhal' என்ற இணையதள தொடரை முன்னணி ஆப் சேவையான ஹாட் ஸ்டாரில் இன்று வெளியிடுகிறது. மாரி, வாயை மூடி பேசவும், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் ட்ரெண்ட்லௌட் உடன் இணைந்து தன் நிறுவனமான ஓபன் விண்டோ மூலம் தயாரித்திருக்கிறார். சமகாலத்தில் இருக்கும் காதல் கதைகளையும், அவற்றின் எண்ணற்ற வகைகளையும், அவற்றை சுற்றியும் பின்னப்பட்டுள்ள இந்த தொடர் மொத்தம் 10 பாகங்களை கொண்டது. மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதன் அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.
பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரில் காமெடியாகாவும் ச...
