த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் கவிஞர் உமாதேவி!
தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி.
‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன.
இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார், உமாதேவி.
'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா…’ பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக...
