தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்
தமிழில் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள உயர்ந்த மனிதன் படம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதனாக விளங்கி வரும் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்து இரட்டையர்கள் ஜே.ட்.-ஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். நடிகராக எந்த ஒரு நேரடி படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் வந்த அத்தனை அழைப்புகளையும் தவிர்த்து நடிக்காமலே இருந்தார்.
அமிதாப்பை எப்படியாவது நடிக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் எ...
