Sunday, April 19
Shadow

தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

தமிழில் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள உயர்ந்த மனிதன் படம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதனாக விளங்கி வரும் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்து இரட்டையர்கள் ஜே.ட்.-ஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். நடிகராக எந்த ஒரு நேரடி படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் வந்த அத்தனை அழைப்புகளையும் தவிர்த்து நடிக்காமலே இருந்தார்.

அமிதாப்பை எப்படியாவது நடிக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் எஸ்.ஜே.சூர்யா வெற்றிபெற்றார். அவர் சொன்ன ‘உயர்ந்த மனிதன்’ கதையை வெகுவாக ரசித்த அமிதாப் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதை ஒட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினியின் கையால் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களாக நடந்துவருகிறது. வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, சிகப்புத்துண்டு விபூதி, குங்குமம் என கிட்டத்தட்ட ஒரு சாமியார் போன்றே அமிதாப் காட்சி அளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளரும் அவரது நெருங்கிய நண்பருமான தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.