தனுஷை அநியாத்துக்கு புகழும் இயக்குனர் வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தை தயாரித்துள்ள தனுஷ் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறன் கூறியதாவது,
அது ஒரு கனா காலம் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தபோது ஒருவரை சந்தித்தேன். அவர் தன் வாழ்வில் நடந்த கதையை சொன்னார். எனக்கு வட சென்னை குறித்த ஐடியா கிடைத்தது. இது குறித்து தனுஷிடம் அப்பொழுதே தெரிவித்தேன். கதை சொன்னவர் அதை எழுதியே கொடுத்தார்.
பொல்லாதவன் படத்தை முடித்துவிட்டு வட சென்னை படம் பண்ணலாம் என்று நினைத்தோம். பட்ஜெட் இல்லை. ஆடுகளம் முடித்து பண்ணலாம் என்று நினைத்தும் முடியவில்லை. தனுஷ் தயாரிப்பாளராக மாறிய பிறகே இந்த படத்தை பண்ண முடியும். இந்த படத்தை பொருத்த வரை தயாரிப்பாளர் தனுஷ் தான் முக்கியம். நான் இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்...
