
நயன்தாரா மற்றும் நிவின்பாலி நடிக்கும் ‘வடக்குநோக்கியந்த்ரம்’
மலையாள சினிமாவின் ஜாம்பவானான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினீத் ஏற்கனவே இயக்குனராகி மாபெரும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் அடுத்த மகனான தியன் ஸ்ரீநிவாசன் தற்பொழுது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஸ்ரீனிவாசனின்மா, பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் படமான 'வடக்குநோக்கியந்த்ரம்' படத்தை இந்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து இயக்க உள்ளார் தியன் ஸ்ரீனிவாசன். இப்படத்திற்கு 'லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும் , அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
இது குறித்து தியன் ஸ்ரீனிவாசன் பேசுகையில், '' காலங்களை தாண்டி இன்று வரை ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் படம் 'வடக்குநோக்கியந்த்ரம்'. அதில் அப்பா நடித்திருந்த 'தினேசன்' கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாதது.அந்த கதையையும் , தினேசன் கதாபாத்திரத்தையும் எனது முதல் படத்திலேயே...