Sunday, June 28
Shadow

Tag: #vairamuthu #kalaignar ##karunanithi

கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்

கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்

Latest News, Top Highlights
தி.மு.க தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த நிகழ்வுக்குக் ‘கலைஞர் புகழ் வணக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கலைஞரைத் தன் தமிழாசான் என்று எப்போதும் சொல்லிவரும் கவிஞர் வைரமுத்து 35 ஆண்டுகளாய்க் கலைஞரோடு அரசியல் சாராமல் நெருக்கமாய் இருந்தவர். இருவரும் ஒவ்வோர் அதிகாலையிலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தவர்கள். கலைஞர் நூல்களை வைரமுத்துவும், வைரமுத்துவின் நூல்களைக் கலைஞரும் வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஒரு நூற்றாண்டைப் புதைத்துவிட்டோம்’ என்று கலைஞர் நினைவிடத்தில் அழுது புலம்பிய கவிஞர் வைரமுத்து அறிவுலகத்தின் சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துகிறார். ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ‘...