வீட்ல விசேஷம் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)
ஆர். ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள திரைப்படம் 'வீட்ல விசேஷம்'. ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் 'வீட்ல விசேஷம்'. போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி { இளங்கோ }, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என அனைவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை கொண்டுள்ளார். குடும்பத்தை போலவே தனது காதலி அபர்ணாவின் மீதும் காதலை கொண்டுள்ளார். சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் தீடீரென தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் பாலாஜி.
50 வயதில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதை அறியும் பாலாஜி சற்று அதிர்ச்சியடைகி...
