பொங்கலுக்கு விஜய் பைரவாவுடன் போட்டி போடும் ஏழு
பண்டிகை என்றாலே புது படங்களின் ரிலீஸ் தான் அப்போது தான் பெரிய படங்களின் போட்டி இருக்கும் ஆனால் இந்த பொங்கலில் போட்டி கொஞ்சம் கடுமை என்று தான் சொல்லணும் அதுவும் விஜய்க்கு.
பண்டிகை காலத்தில் படத்தை வெளியிட்டால் பணத்தை அள்ளிவிடலாம் என்பதை புரிந்து கொண்டு வேண்டும் என்றே பண்டிகையில் படத்தை வெளியிடுவது திரையுலகில் வழக்கத்தில் உள்ளது. இப்படி அறிவிக்கப்பட்ட படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல்போனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடும். வரும் பொங்கல் பண்டிகையின்போதும் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதால் கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த வழக்கத்துக்கு மாறாக வருகிற பொங்கல் பண்டிகையின்போது ...
