விஜய் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல முன்னணி நடிகர்-
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா முடங்கியது பல பிரச்சனைகளை முன் நிறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது
தமிழ் சினிமாவுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. தொடர்ந்து நிறைய பிரச்சனைகளாக கிளம்பி வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் சில முடிவுகளுக்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். ஆனால் விஜய் 62வது படம், நாடோடிகள் படம் பின் 2 படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.
இந்த தகவலை அறிந்த மற்ற பிரபலங்கள் அது என்ன அவர்களது படத்துக்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.
நேற்று கூட விஜய் படப்பிடிப்பை தாக்கி நடிகர் கருணாகரன் டுவிட் போட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் டுவிட்டரில், ஒவ்வொரு படங்களும் எல்லோருக்கும் முக்கியம் தான். ஒருவருக்கு ஸ்பெஷல் அனுமதி கொடுத்தால் மற்றவர்களுக்கு தர வேண்டும். எல்லோருமே இங்கு ஒன்றுதான் என பதிவு செய்துள்ளார்...
