சொன்னதை செய்யாத விஜய் – கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
விஜய் தனது தான் சொன்ன ஒன்றை கடைபிடிக்காமல் போனதால், ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்வி எழுப்புவது விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லை கூடவே அஜித் ரசிகர்களும்
அதாவது, ‘துப்பாக்கி’ படத்தின் போது விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. பிறகு அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, ”இனி என் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி வராது” என்று விஜய் கூறினார்.
ஆனால், ‘மெர்சல்’ படத்தில் மேஜிக் நிபுணராக வரும் விஜய், பல காட்சிகளில் சிகரெட் புகைத்தபடி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ஏராளமான சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பதால், புகை பிடிக்கும் காட்சியில் விஜய் நடித்திருப்பதை யாரும் விரும்பவில்லை.
அதேபோல், புகை பிடிக்க மாட்டேன், என்று சொல்லிவிட்டு, நீங்களே இப்படி செய்யலாமா? என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜயி...
