Sunday, April 19
Shadow

Tag: #vijay #neet #anitha

அனிதா குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல் படங்கள் உள்ளே

Top Highlights
நீட் தேர்வு பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார். 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி படிக்க முடியாமல் போனவர் அனிதா. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். இறுதியில் கடந்த 1-ம் தேதி (செப்டம்பர் 1) அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் அறிக்கை வெளியிட்டு சமூகவலைதளத்தில் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்கள். திரையுலக பிரபலங்களில் ஜி.வி.பிரகாஷ் முதல் நபராக, அனிதா தற்கொலை செய்த அன்றே அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவருக்குப் பிறகு நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தினருக்கு இன்று (செப். 11) நேரில் ஆறுதல் கூறியுள்ளார். ...