பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.வழியில் செல்லும் விஜய் சேதுபதி நூறு சவரன் தங்கம் ஏழை தொழிலாளிக்கு கொடுக்கிறார்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் யாருடன் ஆதரவும் இல்லமல் தனித்து போராடி அதில் வெற்றி கண்ட நடிகர் என்றால் எம்ஜி.ஆர். அடுத்து அஜித் இன்றைய காலகட்டத்தில் விஜய் சேதுபதி என்று சொல்லலாம் சினிமாவில் இவரின் உறவினர்களோ இல்லை நண்பர்களோ இப்படி யாரும் இல்லாமல் தனித்து போராடி வெற்றிபெற்றவர். துபாய் நல்ல வேலை நல்ல சம்பளம் அதை விட்டுவிட்டு சினிமா மீது உள்ள மோகத்தில் சென்னை வந்து போராடி பல அவமானங்கள் பல அசிங்கங்கள் இப்படி எல்லாத்தையும் கடந்து வந்தவர்.
அவருக்கு அன்று துணை இருந்தது அவரது காதல் மனைவி ஜெசி மட்டும் தான் இவரின் துணையோடு சினிமாவில் பலரின் வாசப்படி ஏறி இறங்கி ஒரு வழியாக சினிமா கதவு திறந்தது ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரம் அதில் தன் திறமையை வெளிபடுத்தி தான் ஒரு சிறந்த நடிகன் என்று பேர் எடுத்து தனக்கு என்று ஒரு இயக்குனர் பட்டாளம் தனக்கு என்று எந்த வித இமேஜ் இல்லாமல் தன்னை நம்பி வரும் இயக...
