Sunday, April 19
Shadow

பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.வழியில் செல்லும் விஜய் சேதுபதி நூறு சவரன் தங்கம் ஏழை தொழிலாளிக்கு கொடுக்கிறார்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் யாருடன் ஆதரவும் இல்லமல் தனித்து போராடி அதில் வெற்றி கண்ட நடிகர் என்றால் எம்ஜி.ஆர். அடுத்து அஜித் இன்றைய காலகட்டத்தில் விஜய் சேதுபதி என்று சொல்லலாம் சினிமாவில் இவரின் உறவினர்களோ இல்லை நண்பர்களோ இப்படி யாரும் இல்லாமல் தனித்து போராடி வெற்றிபெற்றவர். துபாய் நல்ல வேலை நல்ல சம்பளம் அதை விட்டுவிட்டு சினிமா மீது உள்ள மோகத்தில் சென்னை வந்து போராடி பல அவமானங்கள் பல அசிங்கங்கள் இப்படி எல்லாத்தையும் கடந்து வந்தவர்.

அவருக்கு அன்று துணை இருந்தது அவரது காதல் மனைவி ஜெசி மட்டும் தான் இவரின் துணையோடு சினிமாவில் பலரின் வாசப்படி ஏறி இறங்கி ஒரு வழியாக சினிமா கதவு திறந்தது ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரம் அதில் தன் திறமையை வெளிபடுத்தி தான் ஒரு சிறந்த நடிகன் என்று பேர் எடுத்து தனக்கு என்று ஒரு இயக்குனர் பட்டாளம் தனக்கு என்று எந்த வித இமேஜ் இல்லாமல் தன்னை நம்பி வரும் இயக்குனருக்கும் அந்த கதைக்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து வெற்றி பெற்றவர் என்று தான் சொல்லணும்.

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற பட்டம் தொடர் வெற்றி வர்த்தகரீதியாக செல்வம் செழிப்பு பேர் புகழ் எல்லாம் கிடைத்து விட்டது இனி நான் என்ற ஆணவம் இல்லமல் இன்றும் அன்று போல தன் நண்பர்கள் முதல் சினிமா தொழிலார்களையும் மதிக்கும் குணம் கொண்ட நடிகர் என்றும் சொல்லலாம். தான் சம்பாதிக்கும் பணம் எதாவது நல்லது செய்யணும் என்ற குறிக்கோள் என்னை வளர்த்த சினிமாவுக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணம் உள்ள நடிகர் என்றும் சொல்லணும்.

அதன் அடிப்படையில் இயக்குனர் ஜனநாதன் அவர்களுடன் இணைந்து அதாவது இயக்குனர் ஜனநாதன் எண்ணத்தை புரிந்து ஏழை சினிமா தொழில் நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்யணும் என்ற எண்ணத்தில் நூறு தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கம் கொடுக்க இருக்கிறார் இதற்கு இவர்கள் மிகவும் கஷ்டப்படும் சினிமாவில் அழிந்து போன தொழில் என்று சொல்லப்படும் பல துறையினரருக்கு தேர்ந்துடுத்து நூறு பேருக்கு உதவ உள்ளார் அதாவது நூறு சவரன் இன்று யாவருக்கும் இல்லாத மனசு கோடி கோடி யாக சம்பாதிக்கும் நடிகனுக்கு இல்லாத மனசு மக்கள் திலகம் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் மனசு என்று தான் சொல்லணும் .
உங்கள் நல்ல மனசுக்கு தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகள் நீங்களும் உங்கள் குடுபத்தாரும் நல்ல இருக்கணும்

Leave a Reply