குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ’ விஜய் சேதுபதி
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா - விதார்த் இணைந்து நடித்திருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறார் நித்திலன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கிறார். அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து படம் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்முட...
