சிங்கம் – 4 யார் ஹீரோ விஜய்யா இல்லை சூர்யாவா கடும் போட்டி
வன்முறை, அந்த வன்முறைக்கேற்ற விறுவிறுப்பு என்று விளையாடுவதில் டைரக்டர் ஹரிக்கு இருக்கிற டெக்னிக் வேற யாருக்கும் இல்லை. சிங்கம் 1, 2, என்று வரிசையாக ஹிட் கொடுத்தவர், சிங்கம் 3 ஐ இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறார். அதற்குள் அவருக்கு சிங்கம் 4 பகுதிக்கான அட்வான்சை கொடுத்துவிட்டதாம் ஒரு பெரிய கம்பெனி. அதுவும் 2 கோடி!
ஹரியை வேறு கதையை யோசிக்க விட மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்த சிங்கம் 4 ல் நடிக்கப் போகும் ஹீரோ யார் என்பதில்தான் ஒரே குழப்பம். விஜய் ஹரி சந்திப்பு நடந்து, அதுவும் பாசிட்டிவ்வாக பதில் வந்து பல மாதங்கள் ஆச்சு. அப்படியிருந்தும் விஜய் ஹரி காம்பினேஷன் அறிவிப்பு என்ன காரணத்தினாலோ இழுபறியாகவே இருக்கிறது. நிஜத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், ஹரி ஒரு ரிங் மாஸ்டர் ஆகிவிடுவார். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு கூட என்...
