‘பீட்சா – 2’ விஜய் சேதுபதி கதாநாயகன் என்னடா இது??
அதிகம் படித்த மக்கள் முதல் சராசரியான பாமர மக்கள் வரை எல்லோர் மனதிலும் எளிதாக நுழைய கூடிய ஒன்று, சினிமா. அதற்கு எந்தவித மொழியும் தேவை இல்லை என்பதை தற்போது ஆழமாக உணர்த்தி இருக்கிறது, விஜய் சேதுபதி - காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படம்.
தெலுங்கில் 'பீட்சா - 2' என்று தலைப்பிடப்பட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.....கடந்த நவம்பர் 27 ஆம் தேதி, ஹைதெராபாத்தில் விமர்சையாக நடைபெற்ற இந்த படத்தின் இசை விழாவே அதற்கு சிறந்த உதாரணம். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், தம்மா ரெட்டி பரத்வாஸ், பெல்லம்கொண்ட சுரேஷ், எஸ் வி ஆர் மீடியா - சோபராணி, இசையமைப்பாளர் மந்த்ரா ஆனந்த் மற்றும் மல்காப்புறம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டது மேலும் சிறப்பு.
'பீட்சா - 2' (புரியாத புதிர...
