அரசியலில் களம் இறங்கும் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளும் கதாபாத்திரங்களில் நடித்து மிக பெரிய வெற்றி கண்டவர் விஜய் சேதுபதி இவரின் புதிய அவதாரம் ஒன்று தற்போது உருவாகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்; தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளிலும், தன்னுடைய கருத்துக்களை கூறியவர் நடிகர் விஜய் சேதுபதி.
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது சீனுராமசாமியின் மாமனிதன் படத்தில் நடிக்கிறார். 96 படத்தின் 100நாள் கொண்டாட்டத்தில் தனது அடுத்தப்பட அறிவிப்பை வௌியிட்டார். படத்தின் பெயர் துக்ளக்.
புதுமுக இயக்குநர் டில்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்துக்கு, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' மற்றும் 'சீதக்காதி' படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன், வசனம் எழுதுகிறார். காரணம் - 'துக்ளக்' படம், முழு நீள அரசியல் படம் என்பதுதான்...
