அச்சமின்றி சிலர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க வரும் விஜய் வசந்த் நடிக்கும் “அச்சமின்றி ”
விஜய் வசந்த் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் “அச்சமின்றி ”
டிரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. அடுத்து தயாரிக்கும் படம் “ அச்சமின்றி “
விஜய்வசந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சமுத்திரகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய், இவர்களுடன் வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் நடிக்கிறார்கள்.
பிட்பாக்கெட் காரனாக சந்தோஷமாக வாழ்ந்து வரும் விஜய் வசந்தை. ஒரு கட்டத்தில் போலீஸ் உளவாளி என தவறாக புரிந்து கொள்கிறார் சிருஷ்டி டாங்கே. இருவரும் காதலிக்கிறார்கள்.
ஒரு சூழலில் ஏன் எதற்காக என்றே தெரியாமல் சில கும்பல்கள் அவர்களை துரத்துகின்றன. ஒரு புலனாய்வின் திருப்பத்தில். போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியையும் அதே கும்பல் துரத்துகிறது. மூ...
