Friday, May 1
Shadow

Tag: #vikram #keerthisuresh #saami #hari #trisha

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரமின் சாமி 2

இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரமின் சாமி 2

Latest News, Top Highlights
விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது....
விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

Latest News
இயக்குனர் ஹரி என்றாலே நல்ல குடும்ப கதைகளாக இருக்கும் என்று நம்பிபோகலாம் என்று இருந்த இயக்குனர் முதல் முதலில் போலீஸ் கதை என்று சாமி படத்தின் மூலம் ஆரம்பித்தார் இந்த படம் 2௦௦3ம் ஆண்டு வெளியானது. இந்த படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி படம் போலீஸ் கதை கொண்ட படம் என்றாலே தமிழில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் அதிலும் குறிப்பாக இந்த படத்துக்கு மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது. விக்ரமின் இயல்பான நடிப்பு மட்டும் இல்லை பாடல்கள் எல்லாமே ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் என்று சொன்னால் மிகையாகது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் எடுக்க போகிறோம் என்று இயக்குனர் ஹரி அறிவித்தார். பதினான்கு வருடங்கள் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம். என்று அறிவித்ததும் இந்த இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உண்டுபண்ணியுள்ளது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துரு...