
நவீன் சந்திராவின் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!
ஆர்.பி. பாலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு
நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் ‘என் சி 51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆர்.பி. பாலா இயக்கத்தில், ஆர்.பி. பாலா மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரிக்கும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.
திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நவீன் சந்திரா, கதாபாத்திரங்களின் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில், அவரது 51-வது படமாக உருவாகும் ‘என் சி 51’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ‘லெவன்’ திரைப்படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 26-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடினர். தற்போது அடுத்தகட்டப் பணிகளை முடித்து, படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் தயாரிப்புத் தரப்பு ஈடுபட்டுள்ளது.
இப்படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். அஜய் மனோஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
டி. கிராபோர்டு கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர். பாடல்களை மோகன் ராஜா எழுத, ஒலிப்பதிவுப் பணிகளை ராஜா நல்லையா மேற்கொள்கிறார். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
ஆர்.பி. பாலா பிலிம்ஸ் மற்றும் பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘என் சி 51’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Naveen Chandra’s ‘NC 51’ Wraps Up Shooting; R.P. Bala Directs the Film
Haripriya Roshini, Bala Saravanan and Kali Venkat play pivotal roles in the film produced by R.P. Bala and P.G. Muthiah
The shooting of ‘NC 51’, starring Naveen Chandra in the lead role, has been successfully completed. Directed by R.P. Bala and jointly produced by R.P. Bala and renowned cinematographer P.G. Muthiah, the film is being developed around a distinctive storyline.
Naveen Chandra has been making a mark in the film industry with his performances and is known for carefully selecting roles that offer something unique. Following the appreciation he received for his performance in ‘Eleven’, the actor is now gearing up for his 51st film, tentatively titled ‘NC 51’, which has generated interest with its fresh narrative.
The film’s shooting, which took place in Chennai, was wrapped up on October 26. The team celebrated the successful completion of the shoot, marking an important milestone in the film’s production. The makers are now preparing to complete the remaining post-production work before bringing the film to theatres soon.
Haripriya Roshini, Bala Saravanan and Kali Venkat play important roles in the film. P.G. Muthiah handles the cinematography, while Sakthi Balaji has composed the music. Ajay Manoj is in charge of editing.
The technical crew includes D. Crawford as the art director and Danger Mani as the stunt choreographer. Mohan Raja has penned the lyrics, while Raja Nallaiah is responsible for sound recording. Nikil Murukan handles the film’s public relations.
Aneesha Reihana and Hagino Shunsuke Kevin serve as co-producers.
Produced under the banners of R.P. Bala Films and P.G. Muthiah Productions, ‘NC 51’ has now entered its next phase following the completion of shooting. Director R.P. Bala and producer P.G. Muthiah are planning to complete the remaining work and release the film in theatres soon. The official release date is expected to be announced at a later stage.
