190 கி.மீ. வேகத்தில் டிரெய்லர் வெளியீடு… ஜி.டி. நாயுடுவின் கனவுலகை உயிர்ப்பித்த ‘ஜி.டி.என்’ படக்குழு!
190 கி.மீ. வேகத்தில் டிரெய்லர் வெளியீடு... ஜி.டி. நாயுடுவின் கனவுலகை உயிர்ப்பித்த 'ஜி.டி.என்' படக்குழு!
தமிழ் சினிமாவில் வழக்கமான ஆடியோ அல்லது டிரெய்லர் வெளியீட்டு விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில், நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ள 'ஜி.டி.என்' திரைப்படத்தின் டிரெய்லர் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, சினிமா நிகழ்ச்சியைத் தாண்டி தொழில்நுட்பம், வரலாறு மற்றும் ஆட்டோமொபைல் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாக மாறியது.
நிகழ்ச்சியின் தொடக்கமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜி.டி. மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்ப...
