
190 கி.மீ. வேகத்தில் டிரெய்லர் வெளியீடு… ஜி.டி. நாயுடுவின் கனவுலகை உயிர்ப்பித்த ‘ஜி.டி.என்’ படக்குழு!
தமிழ் சினிமாவில் வழக்கமான ஆடியோ அல்லது டிரெய்லர் வெளியீட்டு விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில், நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, சினிமா நிகழ்ச்சியைத் தாண்டி தொழில்நுட்பம், வரலாறு மற்றும் ஆட்டோமொபைல் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாக மாறியது.
நிகழ்ச்சியின் தொடக்கமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜி.டி. மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வந்தடைந்தனர். ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மீதான அளவற்ற ஆர்வத்தையும், இந்திய தொழில்துறை வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்பையும் நினைவூட்டும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்தது. அதேநேரத்தில், அதிநவீன சொகுசு சூப்பர் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டு, கடந்த கால சாதனைகளுக்கும் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் இடையே ஒரு அழகிய பாலமாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வின் முக்கிய ஈர்ப்பாக, நடிகர் ஆர். மாதவன், மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிநவீன சூப்பர் காரில் முன்னணி ஊடக பிரதிநிதிகளை கரி மோட்டார் ஸ்பீட்வேயைச் சுற்றி அழைத்துச் சென்றார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நடைபெற்ற இந்த அதிவேக பயணம், ஜி.டி. நாயுடுவின் வேகம், புதுமை மற்றும் பொறியியல் மீதான பார்வையை நேரடியாக உணர்த்தும் அனுபவமாக அமைந்தது.
மாலை சூரியன் மறையும் அழகிய சூழலில், சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. டிரெய்லர் நிறைவடைந்ததும், அரங்கமெங்கும் எழுந்த கரகோஷம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது.
அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, அரசியல் மற்றும் சமூக சூழல் ஆகியவற்றை மிகுந்த துல்லியத்துடன் காட்சிப்படுத்தியுள்ள இந்த டிரெய்லர், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் விடாமுயற்சி, அறிவாற்றல், தேசப்பற்று மற்றும் உலகளாவிய சிந்தனையை வலுவாக பதிவு செய்கிறது. குறிப்பாக ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவன் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தந்தை பெரியார், அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றிருப்பது படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர். மாதவன், “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல; எதிர்காலத்தை முன்னரே பார்த்த தொலைநோக்கு சிந்தனையாளர். இந்தியாவின் பல துறைகளில் அவரது பங்களிப்பு அளவிட முடியாதது. ஆனால் அவரது முழுமையான வாழ்க்கையை இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை. அந்த மகத்தான மனிதரை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் இந்த திரைப்படம்” என்று தெரிவித்தார்.
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், “பள்ளி பருவத்தில் ஜி.டி. மியூசியத்திற்கு வந்திருக்கிறேன். பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளை மட்டுமல்ல, மனிதநேயம் நிறைந்த அவரது வாழ்க்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் கூறுகையில், “ஒரு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஜி.டி. நாயுடு பற்றிய புத்தகம்தான் இந்த திரைப்படத்தின் விதையாக அமைந்தது. அவரது வாழ்க்கையின் மறைக்கப்பட்ட பல உண்மைகள் என்னை ஆழமாக பாதித்தன. அவை பெரிய திரையில் சொல்லப்பட வேண்டிய கதை என்று உணர்ந்தேன்” என்று பகிர்ந்து கொண்டார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த திரைப்படத்தில் ஆர். மாதவன் உடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் தயாரித்துள்ளனர். திரைக்கதையை ஆர். மாதவன் மற்றும் கிருஷ்ணகுமார் ராமகுமார் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவை அரவிந்த் கமலநாதன் கவனித்துள்ள நிலையில், இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார்.
தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படம், இந்தியாவின் மறக்க முடியாத கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை உலக அரங்கில் கொண்டுசெல்லும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உயர்தர தயாரிப்பு, காலத்தைக் கடக்கும் கதை, ஆர். மாதவனின் மாறுபட்ட நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான டிரெய்லர் ஆகிய காரணங்களால் ‘ஜி.டி.என்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

‘GTN’ Trailer Launch Held in Spectacular Style at Kari Motor Speedway; R. Madhavan Brings the Legacy of G.D. Naidu to Life
Coimbatore: Breaking away from the conventional format of film promotions, the trailer of ‘GTN’, starring R. Madhavan, was unveiled in grand fashion at the iconic Kari Motor Speedway in Coimbatore. Inspired by the extraordinary life of India’s legendary inventor and industrial pioneer Gopalswamy Doraiswamy Naidu (G.D. Naidu), the event celebrated innovation, heritage, automobiles, and cinema in a truly unforgettable way.
The launch commenced with a spectacular parade of rare vintage cars from the G.D. Museum, carrying the film’s producers, director, cast, and crew. The procession paid tribute to G.D. Naidu’s remarkable contributions to India’s automobile industry while symbolically connecting his pioneering vision with modern automotive excellence. Luxury supercars were also showcased, creating a striking contrast between the engineering marvels of the past and today’s technological advancements.
One of the biggest highlights of the evening was R. Madhavan taking leading journalists on a thrilling lap around the Kari Motor Speedway in a high-performance supercar that reached speeds of nearly 190 km/h. The adrenaline-filled 15-minute experience reflected G.D. Naidu’s passion for automobiles, engineering, and innovation.
As the sun set over the racetrack, the nearly three-minute trailer of ‘GTN’ was screened amid thunderous applause from the audience. The visually rich trailer captivated viewers with its meticulous recreation of the era and grand cinematic scale, offering a glimpse into the inspiring journey of G.D. Naidu—widely celebrated as the “Edison of India.”
The trailer showcases G.D. Naidu’s relentless pursuit of innovation, patriotism, scientific vision, and extraordinary achievements. R. Madhavan’s remarkable transformation into the iconic inventor has already drawn widespread appreciation. The presence of historical figures, including Periyar E.V. Ramasamy and Adolf Hitler, further hints at the expansive historical canvas explored in the film, adding to audience curiosity.
Speaking at the event, R. Madhavan said, “G.D. Naidu was not just an inventor. He was a visionary, an extraordinary achiever, and above all, a true patriot. His contributions span multiple fields, yet only a small part of his legacy is widely known. His story deserves to be celebrated not just in Tamil Nadu but across India, and that inspired us to make this film.”
Actress Dushara Vijayan shared, “I had visited the G.D. Museum during my school days. I never imagined that one day I would portray G.D. Naidu’s wife on screen. This film introduces not only the genius behind the inventions but also the compassionate human being behind the legend.”
Director Krishnakumar Ramakumar revealed, “The journey of this film began when I picked up a book on G.D. Naidu at a book fair. The untold chapters of his life deeply moved me, and I felt his incredible story deserved to be brought to the big screen.”
The event was attended by producer Varghese Moolan, former ISRO scientist Dr. Nambi Narayanan, G.D. Rajkumar, G.D. Gopal (son of the late G.D. Naidu), several distinguished personalities from the film industry, and members of the media.
The film features an impressive ensemble cast including R. Madhavan, Sathyaraj, Jayaram, Priyamani, Dushara Vijayan, Vinay Rai, Thambi Ramaiah, Nandhalal, DJ Arunachalam, Sheela, Karunakaran, Aditi Balan, Mohan Raman, Kanika, Ramesh Thilak, Karl Andrew Hardee, and Richard Bhakti Klein, among others.
‘GTN’ is written and directed by Krishnakumar Ramakumar and produced by Varghese Moolan, Vijay Moolan, Sarita Madhavan, and R. Madhavan under the banners of Varghese Moolan Pictures and Tricolour Films. The screenplay has been co-written by Krishnakumar Ramakumar and R. Madhavan. Aravind Kamalanathan serves as Director of Photography and Creative Producer, while Govind Vasantha has composed the film’s music.
Following the National Award-winning ‘Rocketry: The Nambi Effect,’ Varghese Moolan Pictures and Tricolour Films have reunited for another inspiring true-life story that celebrates one of India’s greatest innovators.
With its emotionally engaging trailer, impressive production values, and the inspiring story of a visionary who transformed Indian industry, ‘GTN’ has generated tremendous anticipation among audiences. The makers are expected to announce the film’s worldwide theatrical release date soon.
